மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் ராகுல் காந்தி. இவருக்கு வயது 22. இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் காங்கிரஸ் தலைவரின் பெயரான ‘ராகுல் காந்தி’ என்ற பெயரை சூட்டியுள்ளார். இந்த பெயரால் அவருக்கு ஏற்படுகிற சிக்கல்களை குறித்து விவரித்து கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராகுல் காந்தி என்ற பெயரில் ஆதார் அட்டை வாங்கியுள்ளேன். மொபைல் சிம் கார்டு வாங்குவதற்காகவோ, அல்லது மற்ற பணிகளுக்காகவோ எனது ஆதார் அட்டை நகலை கொடுத்தால், என்னை போலி நபராக பார்க்கின்றனர். என் மீது சந்தேகத்துடனும் என்னை பார்க்கின்றனர். மேலும், தொலைபேசியில் என்னை நான் புதிய நபர்களிடம் அறிமுகம் செய்யும் போது, ‘ராகுல் காந்தி எப்போது இந்தூருக்கு வாசிக்க வந்தார்’ என கேட்கின்றனர்.
இவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்றால், இவரது தந்தை ராஜேஷ் மாளவியா இராணுவத்தில், சலவையாளராக பணியாற்றியுள்ளார். இவர் இந்த பணியை தொடர்ந்த போது, அங்குள்ள அதிகாரிகள் அவரை ‘காந்தி’ என அழைப்பதுண்டு.
நாட்கள் கடந்து போக, இந்த பெயரில் நாட்டம் கொண்ட ராஜேஷ், தனது பெயருடன் காந்தி என்ற பெயரை இணைத்துக் கொண்டார். அதன்பின், இவர் ராகுலை பள்ளிக்கு சேர்க்கும் போது, பள்ளியில் ராகுல் மாளவியா என பதிவு செய்வதற்கு பதிலாக ‘ராகுல் காந்தி’ என பதிவு செய்துள்ளார்.
ஆனால், ராகுல், தனது பள்ளி படிப்பை 5-ம் வகுப்புடன் இடைநிறுத்தம் செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அரசியலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. எனது பெயரில் எனது குடும்ப பெயரான மாளவியா என மாற்றுவது குறித்து, தீவிரமாக யோசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…