டெல்லியில் வாக்களிக்காததற்காக தேர்தல் ஆணையம் ரூ.350 அபராதம் விதிக்கப்படும் என்ற வைரலான போலிச் செய்தியைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வாக்களிக்காத மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக செய்தி வைரலானது என்று டெல்லி காவல்துறை கூறியது. பின்னர், சமூக ஊடகங்களில் தேர்தல் ஆணையமே இந்த செய்தியை வதந்தி என்றும் அத்தகைய அபராதம் எதுவும் பிடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது.
தேர்தல் ஆணையம் அபராதம் வசூலிக்கவில்லை என தெளிவுபடுத்திய போதிலும், வதந்தி நிற்கவில்லை, அதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விஷயத்தை Intelligence Fusion and Strategic Operations(IFSO) பிரிவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டெல்லி காவல்துறை தெரிவித்தது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…