கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரங்களில் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு இருங்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே, கேரளாவில் மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேர்தல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். மேலும், மக்கள் கொரோனா தொற்று அதிகரிக்கும் காலங்களில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புதியதாக கேரளாவில் ஆக்சிஜன் ஆலை அமைக்கக் கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். சந்தைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வரக்கூடிய மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இரட்டை முக கவசம் அணியுமாறும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…