பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

2024 புதிய ஆண்டு தொடக்கத்திலேயே ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைகோள் இன்று காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில் வெளிநாடுகளை சேர்ந்த 10 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள், நெபுலா போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில், ‘எக்ஸ்ஸ்பெக்ட், பொலிக்ஸ்’ போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்படி, எக்ஸ்ரே கதிர் மூலம் வானியல் இயக்கங்களை ஆய்வு செய்ய எக்ஸ்போசாட் செயற்கைகோள் ஏவப்பட்டுள்ளது. மொத்தம், 469 கிலோ எடை உடைய செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தி ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்..!

திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெப்சாட் என்ற செயற்கைக்கோளும் இந்த பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட்டில் இணைத்து ஏவப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 60வது விண்வெளி பயணம் இதுவாகும். இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர், எரிபொருள், செயற்கைக்கோள் என மொத்தம் 260 டன் எடை கொண்டது.

இந்த சூழலில், 11 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது.  அதுமட்டுமில்லாமல், போலரி மீட்டர் செயற்கைகோள் கிழக்கு சுற்றுவட்டப்பாதையில் 6 டிகிரி சாய்வுடன் 650 கிமீ தொலைவில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும், பி.எஸ் 4 என்ற ராக்கெட் பாகம் POEM-3 செயற்கைக்கோளை 350 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

9 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

11 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

11 hours ago