காஷ்மீர் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தினேஷ் திரிவேதி உள்ளிட்டோர் சென்றனர்.ஆனால் ஸ்ரீநகரில் இருந்து அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பிவைக்கபட்டனர்.
இதன் பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆளுநர் அழைப்பின் பெயரிலேயே காஷ்மீர் சென்றோம் .காஷ்மீரில் நிலவும் நிலையை பார்ப்பதற்காக ஸ்ரீநகர் சென்றோம், துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.நாங்கள் அழைத்துச்சென்ற ஊடக நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவையெல்லாம் பார்க்கும் போது காஷ்மீரில் சகஜ நிலை இல்லை என்பது தெளிவாகிறது என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…