ஜெய்ப்பூர்-டெல்லியில் இரண்டு அடுக்கு ரயில் அக்டோபர் 10 முதல் தொடக்கம்.!

ஜெய்ப்பூர்-டெல்லி பாதையில் இரண்டு அடுக்கு ரயில் வருகின்ற அக்டோபர் 10 முதல் மீண்டும் இயக்கப்படும் என்று வடமேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
இந்த ரயில் தினமும் காலை 6 மணிக்கு ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு டெல்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையத்தை காலை 10.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இது டெல்லி சாராய் ரோஹில்லாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூரை அடையும். இதற்கிடையில், மார்ச் மாதம் ஊரடங்கு காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025