ஜம்மு காஷ்மீர் க்ரூஸர் வாகன விபத்து..! 7 பேர் உயிரிழப்பு..!

ஜம்முகாஷ்மீரில் கிஷ்த்வாரில் க்ரூசர் வாகனம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஜம்முகாஷ்மீர்: கிஷ்த்வாரில் பகல் துல் நீர் மின் திட்டத்தில் (Pakal Dul Project) பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற குரூசர் வாகனம் ஒன்று மலையிலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்தானது டங்துரு அணை பகுதியில் நடந்துள்ளது. கிஷ்த்வார் துணை கமிஷனர் தேவன்ஷ் யாதவ் கூறுகையில், அப்பகுதியில் கனமழை பெய்ததாகவும், வாகனத்தின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் கூறினார்.
#WATCH | Seven dead and one critically injured in a road accident at Dangduru Dam site in Kishtwar, J&K. Injured being shifted to District Hospital Kishtwar or GMC Doda as per requirement. pic.twitter.com/ye7flNCslE
— ANI (@ANI) May 24, 2023