மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பரிசாக ஜாவா பைக்கை தருவதாக பிரபல பைக் நிறுவனம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்போது,அப்பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் சத்தமாக குரல் எழுப்பினார்.
அப்போது அங்கிருந்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே,குழந்தை விழுந்ததைப் பார்த்தவுடன் வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழந்தையை தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்துக்கு தூக்கிவிட்டார்.ரயில் தன்மீது மோதவிருந்த சில நொடிகளில் தானும் உடனே பிளாட்பாரத்தின் மேலே ஏறி தப்பித்துக் கொண்டார்.
மயூர் செல்கே, குழந்தையைக் காப்பாற்றிய சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதனையடுத்து,மயூர் தைரியமுடன் செயல்பட்ட விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்,மயூர் செல்கே குழந்தையைக் காப்பாற்றும் வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்த ஜாவா பைக் நிறுவனத்தின் இயக்குநர் தாரிஜா,ஒரு புதிய ஜாவா பைக்கினை மயூர் செல்கேவுக்கு பரிசாக தருவதாக அறிவித்துள்ளார்.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…