JEE exam [File image]
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில்,10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய 2-ம் கட்ட தேர்வில் முழுமையாக 100 மதிப்பெண்களை பெற்று 2 பெண்கள் உட்பட 56 மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த இருவர், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி அசத்தியுள்னர்.
100 மதிப்பெண்களை பெற்று 56 முதலிடம் பெற்றவர்களில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 40 பேர், ஓபிசி பிரிவில் இருந்து 10 பேர் மற்றும் ஜென்-EWS பிரிவில் இருந்து 6 பேரும் அடங்குவர். இது ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சம் என கூறப்படுகிறது.
அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில், மாநில வாரியாக தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு, அதிகமான வெற்றி பெற்ற மாணவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலம் உள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…