Categories: இந்தியா

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

Published by
murugan

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழிகாட்டுதல்களை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லாவோஸ் மற்றும் கம்போடியா நாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் ஏமாற்றப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போலி ஏஜெண்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இதன் காரணமாக பல மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். எனவே தான் இந்த அறிவுரையை அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “கம்போடியா அல்லது தெற்காசிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் அனைத்து இந்தியர்களும் கவனமாக செல்லுங்கள் போலி ஏஜெண்டுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் போலி ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். லாவோஸ், கம்போடியா நாட்டில் உள்ள ஏஜெண்டுகள் இந்தியாவில் உள்ள ஏஜெண்டுகளுடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை கவர்ந்திழுக்கிறார்கள். கம்போடியாவில் வேலைக்குச் செல்லும் எவரும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே செல்ல செய்ய வேண்டும்.

வேலை தேடுவோர் இந்திய தூதரகமான புனோம் பென்னை cons.phnompenh@mea.gov.in மற்றும் yisa.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகலாம். லாவோஸ் நாட்டில் டிஜிட்டல் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் உள்ளிட்ட வேலைகளுக்கு இந்தியர்களை அழைத்து வந்து லாவோஸுக்கு வந்த பிறகு கூலித் தொழிலாளிகளாக வேலை செய்ய வைக்கிறார்கள். மேலும் சட்டவிரோத வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

துபாய், பாங்காக், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற பல்வேறு இடங்களில் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு எளிய நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பை உறுதியளிக்கிறார்கள். தாய்லாந்து அல்லது லாவோஸுக்கு வருகை தரும் விசா வேலைவாய்ப்பை அனுமதிக்காது என்றும், அத்தகைய விசாவில் லாவோஸுக்கு வரும் இந்தியர்களுக்கு லாவோ அதிகாரிகள் பணி அனுமதி வழங்குவதில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. எனவே, இந்திய குடிமக்கள் இதுபோன்ற மோசடி வேலை வாய்ப்புகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் லாவோஸில் எந்தவொரு வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு முன்பு தீவிர எச்சரிக்கையுடன் பணியமர்த்தும் ஏஜெண்டுள் மற்றும்  நிறுவனத்தையும் சரிபார்க்கவும்” என தெரிவித்துள்ளது.

 

Published by
murugan

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

1 hour ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

2 hours ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

2 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

4 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

4 hours ago