கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்..! தோல்வியை ஒப்புக்கொண்ட முதல்வர் பசவராஜ் பொம்மை..!

Basavaraj Bommai

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னேறிய நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ள 133 தொகுதிகளில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே வேலையில், ஆளும் பாஜக முன்னிலையில் உள்ள 65 தொகுதிகளில் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்பொழுது வரை காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை தனது தோல்வியை ஒப்புக்கொண்டு 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களால் முத்திரை பதிக்க முடியவில்லை. முடிவுகள் வந்தவுடன் நாங்கள் விரிவான பகுப்பாய்வு செய்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு தேசியக் கட்சியாக நாங்கள் பகுப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல் பல்வேறு நிலைகளில் என்ன குறைபாடுகள் மற்றும் இடைவெளிகள் உள்ளன என்பதைப் பார்ப்போம். இந்த முடிவை நாங்கள் எங்கள் முன்னேற்றத்தின் படியாக எடுத்துக்கொள்கிறோம். என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஷிகாவ்ன் தொகுதியில் பொம்மை 53.05 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்