#Breaking: கர்நாடக எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு இன்று மாலை ஆஜராக வேண்டும் -உச்சநீதிமன்றம் உத்தரவு

Published by
Venu

கர்நாடக எம்எல்ஏக்கள் 10பேரும், சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக அரசியலில் பெரும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆளும் காங்கிரஸ் (11) மற்றும் மஜத (3) எம்.எல்.ஏ.க்கள் செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார்கள்.ஆனால்  கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பினார்.அதில்,5 பேரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கடிதம் அனுப்பினார்.

அதே சமயம் 9 பேரின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார்.அவர்கள் அனைவரும் நேரில் வந்து மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ராஜினாமா செய்த  எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.இவர்களில் 7 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்,3 பேர்  ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் மற்றும்  2 பேர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆவார்.

ராஜினாமா செய்த  எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .அந்த மனுவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் குற்றம்சாட்டினார்கள்.இவர்களது  மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மனுவை இன்று விசாரிப்பதற்காக தெரிவித்தது.

இதனையடுத்து இன்று விசாரித்த  உச்சநீதிமன்றம்,  கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன்னிலையில ஆஜராகி தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்கலாம்.மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்றும் பெங்களூரு வரும் எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பை மாநில டிஜிபி உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது.பின்னர் சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

13 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

43 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago