#KarnatakaElections2023: காலை 11 மணி நிலவரப்படி 21% வாக்குப்பதிவு.!!

2023 Karnataka Election

கர்நாடக பேரவை தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 21% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. 

கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், முற்பகல் 11 மணி நிலவரப்படி, 21% வாக்குப்பதிவு ஆகியுள்ளது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் இந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் முறையாக கிட்டத்தட்ட 9.17 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.

224 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்