இம்ரான் கான் வீட்டில் இருந்த மயில்களை திருடி சென்ற ஆதரவாளர்கள்.!

Imran Khan supporters steal peacocks

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கான் ஆதரவாளர்கள், லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் மாளிகையை சூறையாடினர்.

 

மேலும், வீட்டுக்குள் வைத்திருந்த மயில்கள் உட்பட பல பொருட்களை போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்றில், ஒருவர், ‘குடிமக்கள் பணத்தில் வாங்கியதை எடுத்துச் செல்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

 

அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமான இம்ரான் கானை, நேற்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற (IHC) வளாகத்தில் கைது செய்தது பாகிஸ்தான் சிறப்பு படை. இம்ரான் கான் கைது செய்யப்பட்ட உடனேயே, அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்