கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 560 பேரில் 64 பேர் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரையில் 493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கேரளாவில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது திடீரென 26ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 சுகாதார ஊழியர்கள் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோரும் அடக்கம்.மேலும், வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
இன்று மட்டுமே கொரோனா சிகிச்சை முடிந்து 3 பேர் குணமடைந்தனர். இதுவரை 493 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கேரளாவில் தற்போதைய ஹாட்ஸ்பாட்களின் எண்ணிக்கையானது 15ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 560 பேரில் 64 பேர் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்காக பொதுமக்கள் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘உலகில் பல்வேறு பகுதிகளில் 124 மலையாளிகள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள துக்கத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். எனவும்,
இனி பொது மக்கள் தங்கள் உணவு பழக்க வளாகத்தில் மாற்றம் கண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும். மேலும், வெளியிடங்களுக்கு செல்கையில் முகமூடிகளை அணிய வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். ஹோட்டல்களில் முன்கூட்டியே ஆர்டர் செய்து வாங்கிகொள்ள வேண்டும். இதன் பின்னர் , ஊரடங்கு தொடர்ந்தாலும், தொடராவிட்டாலும் நாம் வைரஸுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும்.’ என தனது கருத்தை பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…