ராஜஸ்தானில் வானத்தில் இருந்து விழுந்த விண்கல் போன்ற பொருள்! பீதியில் மக்கள்!

ராஜஸ்தானில் வானத்தில் இருந்து விழுந்த விண்கல் போன்ற பொருள்.
ராஜஸ்தானின் சஞ்சூர் நகரில், வெள்ளிக்கிழமை அன்று காலை வானத்திலிருந்து விண்கல் போன்ற பொருள் விழுந்ததுள்ளது. இந்த பொருள் விழுந்த இடத்தில், ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 2 கிலோமீட்டர் தொலைவில் கேட்கும் அளவிற்கு வெடி சத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள் இதுகுறித்து கூறுகையில், பொருள் வானத்திலிருந்து விழுந்தபோது வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த பொருள் விபத்துக்குள்ளான மூன்று மணி நேரத்திற்குப் பிறகும் வெப்பத்தை வெளியிட்டு வந்ததால், உள்ளூர்வாசிகள் விலகி இருக்குமாறு மாக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025