கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பொதுமக்களும் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. அதில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது போல ஓர் அறிக்கை வெளியானது. அதில், இது முதற்கட்ட ஊரடங்கு அதன் பின்னர் சிறுது நாள் ஓய்வு விட்டு மீண்டும், மே மாதம் வரை ஊரடங்கு தொடரும் என போடப்பட்டிருந்தது.
இந்த போலி செய்தி இணையத்தில் தீயாய் பரவியது. பின்னர் இந்த செய்தி போலி என அரசு இணையதளத்தில் செய்தி வெளியான பின்னரே இதன் உண்மை தன்மை விளங்கியது. உண்மை செய்தியை விட போலி செய்திகள் மக்களிடம் விரைவாக சென்றடைகிறது என்பதற்கு இந்த போலி செய்தியும் உதாரணமாக அமைந்துவிட்டது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…