மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் எஸ்கார்ட் வாகனம்..! 3 போலீசார் மருத்துவமனையில் அனுமதி…!

accident

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் எஸ்கார்ட் வாகனம் மீது பேருந்து மோதல்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது ராஜஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது கோட்டா மாவட்டத்தில் உள்ள எட்டாவாவில் ஒரு விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது அவரது போலீஸ் எஸ்கார்ட் வாகனமும், பொது போக்குவரத்து பேருந்தும் மோதியது.  லோக்சபா சபாநாயகரின் வாகனம் சேதமடையவில்லை, மேலும் அவர் காயமின்றி உயிர் தப்பினார். 3 போலீசார் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால் அதிவேகமாக வந்து எஸ்கார்ட் வாகனம் மீது மோதியது. ஆம்புலன்சில் இருந்த டாக்டர்கள் போலீசாருக்கு முதலுதவி அளித்தனர். இதையடுத்து, காயமடைந்த போலீஸார் சிகிச்சைக்காக எம்பிஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த போலீசார் மகேந்திரா, நவீன் மற்றும் விஜேந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்