இன்று மம்தா பானர்ஜி டெல்லியில் கட்சி எம்.பிக்களை சந்திக்க உள்ளார்…!

5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று கட்சி எம்.பிக்களை சந்தித்து பேசவுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.
மேலும் நேற்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து டெல்லியில் உள்ள கட்சி எம்பிக்களை சந்தித்து இன்று பேச உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025