இரவு பார்ட்டியில் முட்டை கொடுக்காததால் நண்பனை கொலை செய்த நபர் கைது.!

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் இரவு பார்ட்டியில் தனது நண்பன் சைட்டிஷ்க்கு முட்டை கொடுக்காததால் கொலை செய்துவிட்டார்.
இந்த சம்பவம் நாக்பூரின் மாவட்டத்தின் மங்காபூர் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. 40 வயதான பனாரசியின் உடல் கார் செட் அருகே தலையில் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மங்களூர் போலீசார் விசாரணை செய்தபோது குற்றம் சாட்டப்பட்ட 38 வயதான கெய்க்வாட் என்ற இளைஞனை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், பனாரசி என்ற இளைஞன் தனது நண்பரான கெய்க்வாட்டை இரவு உணவிற்கு அழைத்ததாகவும், இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், இரவு பார்ட்டியில் சரக்கு அடிப்பதற்கு சைடிஷ்க்கு ‘முட்டை கறி’ கொடுக்காததால் என்று குற்றம் சாட்டப்பட்டவரிடம் கூறியபோது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இருவருக்கிடையே அடிதடி ஏற்பட்டதால் இரவு உணவிற்கு அழைத்த நண்பன் கொலை செய்யப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025