தன்னைத்தானே சுட்டுக் கொண்ட மணிப்பூர் ஐபிஎஸ் அதிகாரி

மணிப்பூர் காவல் துறையின் உயர் அதிகாரி பிற்பகல் தனது அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மணிப்பூர் கேடரின் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குமார், மணிப்பூர் ரைபிள்ஸ் காம்பவுண்டில் உள்ள தனது அலுவலகத்தில் தனது சேவை ரிவால்வர் மூலம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரவிந்த்குமார் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு) பொறுப்பில் உள்ளார் .
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரவிந்த்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் சிகிச்சை பெற்று வரும் ராஜ் மெடிசிட்டியில் மாநில காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் ஜே.சுரேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
அவரின் நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் அவர் சிகிச்சைக்கு பதிலளித்து வருகிறார், அவரது உடல்நிலை மேம்பட்டவுடன் அவர் டெல்லிக்கு அனுப்பப்படுவார், ” என்று தலைமைச் செயலாளர் பாபு கூறினார். அவர் ஏன் இந்த நடவடிக்கை எடுத்தார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025