மணிப்பூர் கலவரம்: குற்றவாளிகளை தூக்கில் ஏற்றவேண்டும்… குஷ்பு ட்வீட்.!

Kushbu Condemns mv

மணிப்பூர் கலவரம் தொடர்பாக வெளியான வீடியோ குறித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என குஷ்பு ட்வீட்.  

மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கி நடந்து வரும் கலவரம் தொடர்பாக மனதை பதைபதைக்கும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வீடியோவில் மணிப்பூர் மாநில பகுதியில் 2 பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி அழைத்து செல்கிறது. இந்த கொடூர வீடியோ இணையத்தில் பரவ ஆரம்பித்ததும் பலரும் தங்கள் கண்டங்களை வலுவாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் குஷ்பு, இந்த வீடியோ சம்பவம் குறித்து தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டரில், எந்தவொரு சூழ்நிலையிலும் இப்படிப்பட்ட குற்றம் புரிந்த அனைவருக்கும் மரண தண்டனையை தவிர வேறு எதுவும் சரியானதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கில் ஏற்றவேண்டும், வேடிக்கை பார்ப்பவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். எந்தவித கலவரங்கள் என்றாலும், முதலில் பெண்கள் தான் தாக்கப்படுகிறார்கள், இவர்கள் எவ்வளவு கோழைத்தனமானவர்கள், முதுகெலும்பில்லாதவர்கள், பாதுகாப்பற்றவர்கள், அழுகியவர்கள் மற்றும் மனிதாபிமானமற்றவர்கள் என்பதை இது காட்டுகிறது. இவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என குஷ்பு பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்