நாட்டில் பல சிவப்பு மண்டல மாவட்டங்கள், ஆரஞ்ச் மண்டலமாக மாறியது.!

இந்தியாவில், சிவப்பு மண்டலப் பட்டியலில் 129 மாவட்டங்களாக குறைந்தும், ஆரஞ்ச் மண்டல பட்டியலில் 250 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் தடுக்க நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறையாததால் மீண்டும் 19 நாள்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி நீடித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையெடுத்து, நாடு முழுவதும் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 15-ம் தேதி 177 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பட்டியலிலும், ஆரஞ்ச் மண்டலத்தில் 207 மாவட்டங்கள் இருந்தது. ஆனால் தற்போது சிவப்பு மண்டலப் பட்டியலில் 129 மாவட்டங்களாக குறைந்தும், ஆரஞ்ச் மண்டல பட்டியலில் 250 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது.
மே 03-ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்குத் தளர்த்துவதாக இருந்தால் இந்த, அடிப்படையில் தளர்த்தலாம் எனக் கூறப்படுகிறது. 14 நாட்களில் புதிதாக யாருக்கும் அந்த மாவட்டம் கொரோனா இல்லையென்றால் அது ஆரஞ்ச் மண்டலமாகும். 28 நாட்களில் புதிதாக யாருக்கும் யாருக்கும் கொரோனா இல்லையென்றால் அந்த மாவட்டம் பசுமை மண்டலமாக அறிவிக்கப்படும்.
இந்த சிவப்பு மண்டலத்தில் உள்ள 20 மாவட்டங்கள் தான் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 60 சதவீதத்தை கொண்டுயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025