ராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது ராகுல் காந்திதான் முன்வர வேண்டும்.
இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அவர்கள் மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் இவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுல் காந்தி நாளுக்கு நாள் முதிர்ச்சி பெற்று வருகிறார். அவரை இனி சிறு குழந்தை என்று சொல்ல முடியாது. தலித் மக்களின் வீடுகளுக்கு செல்கிறார். அங்கு உணவுகளை உண்ணுகிறார். மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கலப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டும். சாதிகள் ஒழிய கலப்பு திருமணம் அவசியம் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். காந்தியின் கருத்தை ராகுல் காந்தி பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ராகுல் காந்தியை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது ராகுல் காந்திதான் முன்வர வேண்டும் என்றும், ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வண்ணமாக, ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்யலாம். இது இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…