மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

மறைந்த மன்மோகன் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 77 லட்சம் என கூறப்படுகிறது.

Manmohan Singh's net worth

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 92. அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இரவு இயற்கை எய்தினார்.

மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2014 வரை இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக இருந்தார். இதற்கு முன், 1991 முதல் 1996 வரை, நாட்டின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

குறிப்பாக, இவர் இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றே சொல்ல வேண்டும். தற்போது, மன்மோகன் சிங்  மறைவையொட்டி, அவர் குறித்த அனைத்து தகவல்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கூகுளில் தேடப்படும் தகவல்களில், மன்மோகன் சிங்கின் அரசியல் பயணம், அவரது குடும்பம், சொத்துக்கள் ஆகியவை அதிகம் தேடப்பட்டு வருகின்றனர்.

ஒரு தகவலின்படி, பிரதமராக 10 ஆண்டுகள் பதவி வகித்த மன்மோகன் சிங், 2019ல் ராஜ்யசபாக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரிடம் ரூ.15 கோடியே 77 லட்சம் சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், அவருக்கு டெல்லி 1 பிளாட்டும் மற்றும் சண்டிகரிலும் 1 பிளாட் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, அந்த பிரமாணப் பத்திரத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, அவர் பெயரில் எந்த காரும் இல்லை, எந்த வித நகைகளும் இல்லை. ஆனால், அவரது மனைவியிடம் சுமார் ரூ.2.86 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

2013-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங்கிடம் மாருதி 800 கார், பாரத ஸ்டேட் வங்கி, தபால் வங்கிகளில் டெபாசிட் செய்திருந்தார். அதன்படி, தபால் சேமிப்பு திட்டத்தில் ரூ.12 லட்சத்து 76 ஆயிரம் இருந்தது, SBI  கணக்கில் மொத்தமாக 3.46 கோடிரூபாய் வைதித்திருந்தார்.

இது தவிர இவரது சோடித்து மதிப்பில், டெல்லி மற்றும் சண்டிகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 11 ஆண்டுகளுக்கு முன்பே சுமார் ரூ.7 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவென்றால், அந்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு கடன் இல்லை என குறிப்பிட்டது அவரின் நேர்த்தியான நிதி ஒழுக்கத்திற்கான சான்றாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings