டெல்லி குர்கானில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ மாணவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி குர்கான் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு ஆயுர்வேத மருத்தும் மற்றும் அறுவை சிகிச்சை பயின்று வந்த வினித் குமாரை கொலை செய்த குற்றவாளி லக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதே பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரி மாணவரான லக்கி, வினித்குமாரை கொலை செய்துவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பித்து சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து குருகிராம் மேற்கு காவல் ஆணையர் தீபக் அவர்கள் கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் இது காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு என்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள லக்கி என்பவரும் அவரது நண்பர்களும் ஏற்கனவே வினோத் குமாருடன் வாக்குவாதப்பட்டதாகவும், அதன் பின்பு தான் இந்த கொலை அரங்கேறி உள்ளதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இந்த கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளியையும் தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…