கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொல்கத்தாவில் துவங்கப்படும் மெட்ரோ சேவை!

கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொல்கத்தாவில் துவங்கப்படும் மெட்ரோ ரயில் சேவை.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்பட்டதால் இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாகவே போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதில் ஒன்றாக கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீர் நுழைவு தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவைகள் இன்று காலை 8 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, 2 மணி நேரத்தில் சுமார் 3000 பேர் பயணம் செய்துள்ளதாக கொல்கத்தா மெட்ரோ ரயில் பொது மேலாளர் மனோஜ் ஜோஷி அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நெறி முறைகள் உடன் பயணிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025