கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் மீதான மொபைல் ஹேக்கிங் 845 சதவீதம் அதிகரித்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் நிறுவனத்தின் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அமைப்புகள் மீதான மொபைல் ஹேக்கிங் கடந்த வருடம் அக்டோபரில் 1,345 ஆக இருந்ததாகவும் 2020 அக்டோபர் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 12,619 ஆக அதிகரித்துள்ளதாகவும் சைபர் பாதுகாப்பு நிறுவனமாகிய செக்பாயிண்ட் நிறுவனத்தின் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் 845 சதவீதம் மொபைல் ஹேக்கிங் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் 2020இல் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொபைல் நிறுவனங்களும் இந்த தாக்குதலை அனுபவித்து உள்ளதாகவும், பெரும்பாலும் இந்த சைபர் தாக்குதல் மூலமாக பயனாளர்களின் இரகசிய தகவல்கள் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகில் உள்ள மொபைல் சாதனங்களில் குறைந்தது 40% மொபைல்களில் உள்ள சிப்காட் குறைபாடுகள் காரணமாக மொபைல்கள் இணைய தாக்குதலுக்கு உள்ளாவது இயல்பானதாக இருப்பதாகவும், முதலில் இதற்கான தீர்வை விரைவில் கண்டறிய வேண்டும் எனவும் செக்பாயிண்ட் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…