மோச்சா புயல் தாக்கம்…3 பேர் பலி..பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

மியான்மரில் மோச்சா புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான ‘மோக்கா’ புயல் தென்கிழக்கு வங்கதேசம் வடக்கு மியான்மர் இடையே நேற்று கரையை கடந்தது. புயல் கரையையை கடந்தபோது, போது 210 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது.
இந்த கடுமையான புயலால் பங்காளதேஷின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் கரையைக் கடந்தபோது பங்காளதேஷ் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
Cyclone #Mocha has made landfall over #Myanmar coast few hours back.
Videos coming out looks damn scary!! Hope people have taken necessary precautions.#CycloneMocha #CycloneMochaUpdate pic.twitter.com/DeaJbV58Lm
— Hrishi Jawahar (@jhrishi2) May 14, 2023
இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகரங்களில் இருந்த புயல் வீடுகள், மின் மாற்றிகள், செல்போன் டவர்கள், படகுகள் மற்றும் விளக்குக் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கூனின் தென்மேற்கே சுமார் 425 கிலோமீட்டர் (264 மைல்) தொலைவில் உள்ள கோகோ தீவுகளில் உள்ள விளையாட்டு கட்டிடங்களின் கூரைகளையும் புயல் கிழித்துவிட்டது.
Storm surges whipped up by a powerful cyclone moving inland from the Bay of Bengal inundated the Myanmar port city of Sittwe https://t.co/YG8TOBMG0X pic.twitter.com/li37p4HiRa
— Reuters (@Reuters) May 14, 2023
மேலும், இந்த புயலில் மியான்மரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், ஒருவர் ஆலமரம் மேலே விழுந்து உயிரிழந்தாவும் கூறப்படுகிறது. மேலும், பங்காளதேஷின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Big scale devastation in #Sittwe , the capital city of #Rankine state
Video = Kyaw Myo#Myanmar #CycloneMocha pic.twitter.com/MECCgzFn67
— Weatherman Shubham (@shubhamtorres09) May 14, 2023
அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உட்பட பல கடலோர பகுதிகள் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பலத்த காற்று வீசிய பதைபதைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.