மேற்கு வங்கத்தில் 300 க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா சார்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் வன்முறை உச்சத்தில் உள்ளது. 300 க்கும் மேற்பட்ட பாஜக-வை சார்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் விசாரணை ஒரு அங்குலம் கூட நகரவில்லை என ஷா நேற்று சுற்று பயணத்தை முடித்து விட்டு மேற்கு வங்காளத்திலிருந்து செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார்.
வருகின்ற மாநில சட்டசபை தேர்தலில் 294 இடங்களில் 200- க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் இலக்கை பாஜக நிர்ணயித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த நாடாவின் மீதான தாக்குதலைக் கண்டித்த அமித்ஷா, இந்த தாக்குதல் நட்டா மீது மட்டுமல்ல, மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் மீதும் தான் என்று கூறினார்.
அடுத்தாண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா பிரச்சாரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் கொல்கத்தா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…