மும்பையில் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
தெற்கு மும்பையின் நாக்பாடா பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஒருவர் பஸ் நிறுத்தத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் 45 வயதுடையவர் நாக்பாடா பகுதியில் நடைபாதைகளில் வசித்து வந்த பிச்சைக்காரர் என்று தெரிவித்தனர்.
இன்று காலை, பெல்லாசிஸ் சாலையில் ஒரு பேருந்து நிறுத்தத்தின் தடியிலிருந்து ஒரு நபர் தூக்கில் தொங்கியதைப் பற்றி போலீசாருக்கு அழைப்பு வந்ததை தொடந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை ஜே.ஜே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இறந்தவரின் அடையாளம் இன்னும் காணப்படவில்லை. நாங்கள் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறோம் என்று நாக்பாடா காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்பிரகாஷ் போஸ்லே கூறினார்.
இது குறித்து ஒரு தற்செயலான மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் கூறுகையில், இறந்தவர் முன்பு மகாராஷ்டிரா பிச்சை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த சில பிச்சைக்காரர்கள் தங்களுக்குத் தெரிவித்தனர் என்றார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…