31 வருடம் தலைமறைவு.. 65 வயதில் கைதான ‘1993 கலவர’ குற்றவாளி.!

மும்பை: 31 வருடங்களாக தலைமறைவாக இருந்த மும்பை கலவர வழக்கில் தொடர்புடைய நபர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
1992ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு கலவரத்தின் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. 1993ஆம் ஆண்டு மும்பையிலும் கலவரம் நிகழ்ந்தது. அப்போது கலவரத்தில் கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட வழக்கில் கைதாகி இருந்தவர் சையது நாதிர் ஷா அப்பாஸ் கான்.
இவர் கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னாளில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் சையது நாதிர் ஷா நேரில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து, அவரது வீடு, உறவினர்கள் வீடு என்று போலீசார் தேடி வந்துள்ளனர்.
சுமார் 31 ஆண்டுகளாக பல்வேறு முறைகளில் தேடி இறுதியாக செல்போன் அழைப்புகளை பின்தொடர்ந்து, அதன் மூலம் சையத் நாதிர் ஷா அப்பாஸ் கான் இருக்கும் இருப்பிடம் அறிந்து மும்பை, ரஃபி அகமது கிட்வாய் மார்க் காவல் நிலைய அதிகாரிகள் சையதை கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கைதான சையத் நாதிர் ஷா அப்பாஸ் கானிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025