11 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் இதே மாலை வேளையில் தான் லஷ்கர் – இ – தொய்பா தீவிவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் அந்த கோரச் சம்பவம் நடைபெற்றது. மும்பையில் ஆள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முதல் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. ரயில் நிலையத்தில் திடீரென தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கு 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 120 பேர் படுகாயம் அடைந்தனர்.
அடுத்ததாக மும்பையில் பிரபலமாக இருக்கும் நாரிமன் இல்லம், லெபர்ட் காஃபோவில் தாக்குதல் நடைபெற்றது. அங்கு நான்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 25 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
அடுத்த இடம் தற்போது வரை நினைவிருக்கும் மும்பையின் நட்சத்திர ஹோட்டல்களான தாஜ் ஹோட்டல் மற்றும் ஓரியண்ட் ஹோட்டல் என இந்த ஹோட்டலில் பல வெளிநாட்டவர் தங்கியிருந்தனர். அந்த சமயம் தீவிரவாதிகள் உட்புகுந்து சுமார் 300க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். மூன்று நாட்கள் பிணைக்கைதிகளாக தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தனர். மூன்று நாட்களாக நமது ராணுவம் போராடி மீட்டனர். இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய அஜ்மல் கசாப் போன்ற முக்கிய தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டு பிணைக்கைதிகள் இருந்தவர்களை ராணுவத்தினர் மீட்டனர்.
இந்த மும்பை தாக்குதலில் சுமார் மொத்தம் 160 பேர் பலியாகி இருந்தனர். இதில் பொதுமக்கள் வெளிநாட்டவர் காவல்துறையினர் ராணுவத்தினர் என பலர் பலியாகி இருந்தனர் .இந்த சம்பவம் தற்போது நினைத்தால் கூட மனதை பதறவைக்கும் சம்பவமாக இருக்கிறது. இன்றோடு அந்த தாக்குதல் நடைபெற்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், என்றும் மாறவாத வடுவாக நம் நெஞ்சங்களில் இருக்கிறது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…