சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் நீட் தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இன்று விசாணைக்கு வந்த வழக்கு சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் நீட் தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்றும் மருத்துவ படிப்பு வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க நீட் தேர்வு என்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே 2010-ல் வெளியிடப்பட்ட அந்த அரசாணையை எதிர்த்து வேலூர் சிஎம்சி உள்ளிட்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்தன. இதையடுத்து மத்திய அரசு தரப்பிலும், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.
பின்னர் இந்த வழக்குகள் அனைத்தையுமே உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் அந்த வழக்குகளை மாற்றி ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில், தற்போது சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் நீட் தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…