தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு …!

தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த வைரசுஸுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து இந்தியா வரக்கூடிய பயணிகளுக்கு பயண கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த 11 நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் எனவும், கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழ் இருந்தாலும் மீண்டும் விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025