அந்தமானில் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடம்; பிரதமர் இன்று திறந்து வைப்பு.!

PortBlair PMModi

அந்தமானில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

அந்தமானில் போர்ட் பிளேயரில் ரூ.710 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். போர்ட்பிளேர் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும், இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது.

பிரதம மந்திரி அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விசாலமான புதிய முனைய கட்டிடம் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும். கட்டிடத்தின் மற்ற அம்சங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 500KW திறன் கொண்ட சூரிய மின் நிலையம் ஆகியவை அடங்குகிறது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இது குறித்து பேசுகையில் 710 கோடி ரூபாய் மதிப்பிலான விமான நிலையம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. டெல்லி, சென்னை, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் வரும்காலங்களில் விரிவு படுத்தப்படும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்