2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டையே உலுக்கிய மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கற்பழித்து டெல்லி சாலையில் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மருத்துவ தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் பேருந்து இயக்கிய டிரைவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இன்னொரு குற்றவாளி 17 வயதே நிரம்பியவன் என்பதால் மூன்று வருட சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டான்.
மீதமுள்ள 4 குற்றவாளிகளுக்கும் அப்போது தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அந்த நால்வர் மேல்முறையீடு செய்து இருந்தனர். இருந்தும் 2016ஆம் ஆண்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் இவர்கள் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிர்பாயா மருத்துவக் கல்லூரி மாணவியின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர். தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னரும் இன்னும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது என அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதிகள் பற்றாக்குறையால் இந்த விசாரணை மிக மெதுவாக நடந்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த வழக்கில் எந்த வித விசாரணை நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி மாணவியின் தாயார் கூறுகையில், ‘7 வருடமாக எனது பிள்ளையின் மரணத்திற்கான நீதிக்காக போராடி வருகிறேன். குற்றவாளிகள் சமர்ப்பித்த கருணை மனுக்களை ஏற்க கூடாது என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நான் கோரிக்கை வைக்கிறேன் . விரைவில் அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுங்கள்.’ என உருக்கமாக கூறியுள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…