நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியில் பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தின் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. நித்தியானந்தா ஆபாச வீடியோ, சீடர்கள் பலாத்காரம், பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற பல சர்சையில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் பெண் குழந்தைகளை அடைத்து வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.அந்த புகாரை கொடுத்தவர் நித்தியானந்தாவின் செயலாளர்களின் ஒருவராக இருந்த ஜனார்தன் ஷர்மா. இவர் கொடுத்த புகாரின் பேரில் குஜராத் அரசு அந்த ஆசிரமத்தை மூடியுள்ளது.
இந்நிலையில் நித்யானந்தா “கைலாஷ்” என்ற பெயரில் ஒரு தனிநாடு உருவாக்க போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதற்காக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி உள்ளார் நித்யானந்தா.
இதற்காக “கைலாசா”என்ற இணையதளத்தை உருவாக்கி ஹிந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் இந்த நாட்டில் குடிமகன் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது 10 கோடி பேர் இருப்பதாக நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டுக்கு பாஸ்போர்ட், மொழி ஆகியவை இருக்கிறது.பாஸ்போர்ட் இரு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ,இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…