NO BAG DAY – புதுச்சேரியில் புத்தக பை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்…!

புதுச்சேரியில் நோ பேக் டே-யை முன்னிட்டு இன்று மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்தனர்.
புதுச்சேரியில் மாதந்தோறும் கடைசி வேலை நாளை, பையில்லா தினமாகக் கடைப்பிடிக்க அம்மாநிலக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஆண்டுக்கு பத்து நாட்கள் ‘NO BAG DAY’ கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நோ பேக் டே-யை முன்னிட்டு இன்று மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்துள்ளனர். மாதத்தின் கடைசி வேலை நாளை நோ பேக் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமலுக்கு வந்துள்ளது.
புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களுக்கு, அவர்களது திறமையை வளர்க்கும் வண்ணம், கைவினைப் பொருட்கள் செய்தல், வினாடி-வினா போட்டி, கதை சொல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025