கனமழையால் ஸ்தம்பிக்கும் வட இந்தியா.! உ.பியில் மட்டும் 24 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழப்பு.!

கனமழையால் உத்தரபிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயைபு வாழ்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல், தொடர் மழையால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்ற காட்சிகளும் இணையத்தில் வெளியானது.
மேலும், வட இந்தியாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடி, மின்னல் மற்றும் மழையால் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழையால் உத்தரபிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்ததால், 24 மணி நேரத்தில் மின்னல் மற்றும் மழையால் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர்.
நிவாரண ஆணையர் அலுவலகம் அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி 17 பேரும், நீரில் மூழ்கி 12 பேரும், கனமழை காரணமாக 5 பேரும் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மின்னல், வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சத்தை உடனடியாக வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.