டாஸ்மாக் விற்பனை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் பல்வேறு முக்கிய நிர்வாகிகளுடன் இன்று டாஸ்மாக் மது விற்பனை தொடர்பான முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைஏப்ர உள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கணினிமயமாக்கப்பட்ட ரசீது வழங்குவது, அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பதை தடுப்பது மற்றும் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும் கட்டுப்பாட்டு அறை அமைப்பது மற்றும் பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பேக் களில் மது விற்பனை செய்வது, மாவட்ட வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மேலும் இதனை அதிகப்படுத்தலாமா என்பது குறித்தும் முக்கியமாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
