நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர், ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி இஸ்ரோ களம் இறங்கியது. மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையுடன் சேர்ந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும் இந்தப் பணியில் இறங்கியது. ஆனாலும், விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘ நிலவில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், ஆர்பிட்டர் பகுதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.’ என தெரிவித்தார்.
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…