மருத்துவமனை விரைந்தார் ஒடிசா முதலமைச்சர்!

மீட்பு பணிகளை துரிதப்படுத்த பால்சோர் மாவட்ட அதிகாரிகளுக்கு ஒடிசா முதலமைச்சர் உத்தரவிட்டார்.
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த விபத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், பால்சோர் அருகே ரயில் விபத்து இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விபத்து நேரிட்டது எப்படி என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக், மீட்பு பணிகளை துரிதப்படுத்த பால்சோர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மிகவும் சோகமான ரயில் விபத்து, இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரே இரவில் உழைத்த உள்ளூர் குழுக்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பிறருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
ரயில்வே பாதுகாப்புக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்கள் பாலசோர் மற்றும் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் பிரதே பரிசோதனை செய்து அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை காண பால்சோர் மருத்துவமனைக்கு விரைந்தார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக்.