ஒடிசா ரயில் விபத்து..! வேதனை அடைந்தேன்..விராட்கோலி ட்வீட்..!

ஒடிசா ரயில் விபத்தில் யரிழந்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
காயமடைந்த 650க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர், ‘ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும்அவர்களை சென்றடையும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
Saddened to hear about the tragic train accident in Odisha. My thoughts and prayers go out to the families who lost their loved ones and wishing a speedy recovery to the injured.
— Virat Kohli (@imVkohli) June 3, 2023