ஓமைக்ரான் அச்சுறுத்தல் – பள்ளிகளை மூட முதலமைச்சர் உத்தரவு!

ஓமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிகளை மீண்டும் மூட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு.
ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்கள் மீண்டும் மூடவும் மற்றும் அனைத்து விதமான கொண்டாட்டங்களுக்கு தடை எனவும் அறிவித்துள்ளார். மேலும் திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் அச்சறுத்தலால் ஏற்கனவே டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தியாவில் ஒமைக்ரான் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 21 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேருக்கும்,டெல்லியில் 165 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும்,தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025