மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் ஆனால் அங்கு பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதித்தது. இதனால் இந்தியா முழுவதும் பல நகரங்களில் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியது.
வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக ரூ. 200 வரை விற்பனை செய்யபட்டு வருகிறது. இதனால் வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து ஆந்திர அரசு தங்கள் மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.25 விற்பனை செய்து வருகிறது.
உழவர் சந்தைகளில் விற்கப்படும் வெங்காயத்தை பொது மக்கள் தினமும் வாங்கி செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூட்டம் குவிந்தது. நேற்று அதிக கூட்டம் வந்ததால் சுமார் மூன்று கிலோமீட்டர் வரிசையில் நின்று தலா ஒரு கிலோ வெங்காயத்தை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
இந்நிலையில் விஜயவாடாவில் வெங்காயம் வாங்க வந்த சாம்ப்பய்யா என்பவர் நீண்ட நேரம் வரிசையில் நின்று கொண்டு இருந்தபோது பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு சென்றபோது சாம்ப்பய்யா உயிரிழந்தார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…