மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் பேசவுள்ள நிலையில், மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதாவது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் காங்கிரேசின் ஆதின் ரஞ்சன் சவுத்ரி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதுவும் மக்களவையில் காங்கிரேசின் ஆதின் ரஞ்சன் சவுத்ரி பேச அனுமதி மறுப்பு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை பேச அனுமதித்தற்கு கண்டனம் தெரிவித்தனர் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள்.
மக்களவையில் நடைபெற்று வரும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.