ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்தது தொடர்பாக சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் சிறையில் உள்ளதால் வெளியில் வரமுடியாத சூழல் இருந்து வருகிறது.
இந்த நிலையியில் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…