#BREAKING : பத்மநாப சுவாமி கோயில் வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published by
Venu

பத்மநாபசாமி கோவிலை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு, நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று அளித்த தீர்ப்புக்கு எதிராக, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள், இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பத்மநாபசாமி கோவிலின் திறப்பது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது நீதிமன்றம்,  நீதிபதி தலைமையிலான குழு நிர்வகிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.  திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் குழு பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை கவனிக்கும் என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், கோயிலின் நான்கு நிலத்தடி பாதாள அறைகளில் தங்க ஆபரணங்கள், பாத்திரங்கள், நகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விலைமதிப்பற்ற கற்கள் உள்ளன என்று ஒரு ஆய்வின் போது தெரியவந்தது. இதனையடுத்து, வரலாற்று கோயிலின் பெட்டகத்தை திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் எதுவும் அளிக்கவில்லை.

Published by
Venu

Recent Posts

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…

3 minutes ago

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

2 hours ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

2 hours ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

3 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

4 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

4 hours ago