ரயில் கட்டணம் எல்லா நாட்களும் ஒரே விலையில் தான் இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது ரயில் கட்டணங்களை மாற்றி, ப்ரீமியம் தொகைக்கு விற்பது, சலுகைகள் அளிப்பது என மாற்ற மத்திய அரசு பரீசலித்து வருகிறது. தீபாவளி, துர்கா பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரயில் டிகெட்டுகளை ப்ரீமியம் தொகைக்கு விற்பது, மற்ற நாட்களில் சாதாரண விலைக்கு விற்பது எனவும், பயணிகளுக்கு சலுகைகள் அளிப்பது போன்றவை குறித்து மத்திய ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. இந்த திட்டம் […]
ஆர்.கே.நகருடன் சேர்த்து, 4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் சிக்கந்த்ரா ((Sikandra)) தொகுதியிலும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் லிக்காபலி ((Likabali)) மற்றும் பக்கெ – கேசாங் ((Pakke-Kessang)) தொகுதிகளிலும் ஆளும் கட்சியான பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதேபோன்று மேற்கு வங்க மாநிலம் சபாங் ((Sabang)) தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில், அந்தந்த […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அதிகமாக ஊடுருவி அங்குள்ள இளைஞர்களிடையே தீவிரவாதத்தை பரப்பி தீவிரவாதிகளாக இளைஞர்களை மாற்றி வருகின்றனர். ஏற்கனவே அங்கு தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக ரயில் சேவை 50வது தடவையாக நிறுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் நவம்பர் வரை சுமார் 117 காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி உள்ளனர். இந்த தகவல் அங்குள்ள போலீசார் வழக்கு பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. source : www.dinasuvadu.com
ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஈனாம் காம்பீரின் செல்போனை, டெல்லியில் இரண்டு மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். டெல்லி ரோகினி பகுதியில் வசித்து வரும் இவர் நேற்று முன் தினம் இரவு அருகில் உள்ள பூங்காவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், ஈனாம் காம்பீரிடம் வழி கேட்பது போல் நடித்துள்ளனர். ஐபோனை கையில் வைத்த படி அவர் வழி காண்பிக்கையில், ஐ.போனை பறித்துக் கொண்டு மர்மநபர்கள் தப்பினர். இருளாக இருந்ததால் இருசக்கர வாகனத்தின் […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..இன்று முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு 93 வது பிறந்த நாள் ஆகும் .. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து. * வாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி source: www.dinasuvadu.com
முத்தலாக் மசோதாவில் முரண்பாடுகள் உள்ளதாகவும் அதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் கூறியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற சட்டவாரியத்தின் அவசரக் கூட்டத்திற்குப் பின்னர் அதன் தலைவர் சஜ்ஜாத் நோமனி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முத்தலாக் மசோதாவை வடிவமைக்கும் போது மத்திய அரசு சம்பந்தப்பட்ட யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார். இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய மசோதாவில் முத்தலாக் […]
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் சேவை பாதிப்பு; 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது 26 ரயில்கள் தாமதம், 6 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.. source: www.dinasuvadu.com
உத்தரப்பிரதேசம் ; காந்தியவாதியும், சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என வலியுறுத்தி வருபவருமான அன்னா ஹசாரே உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் மகா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். பெருகிவரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நாட்டில் தற்போது விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் மற்றும் மோசமாகவும் உள்ளதாக குறிப்பிட்ட ஹசாரே மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராய வேண்டும் என்று கூறினார், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு […]
டெல்லி; மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்றாம் கட்டமாகப் பணிகள் முடிக்கப்பட்டு பாதையில் ரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஏற்கெனவே 2 கட்டப் பணிகள் முடிக்கப்பட்டுப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்கா முதல் கால்காஜி மந்திர் வரை பணிகள் முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நாளை தொடங்கிவைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் […]
ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார் எனவும் அதேபோல் மதவாத கட்சியான பாஜக ஒரு காலத்திலும், தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என்பதையும் ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது என ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் இவற்றை தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
தமிழகம் மட்டுமன்றி இன்று மேற்குவங்கத்தில் ஒரு தொகுதி,உத்திரப்பிரதேசத்தில் ஒரு தொகுதி மற்றும் அருணாசலப்பிரதேசத்தில் இரு தொகுதிகளிலும் மொத்தம் இந்தியா முழுமைக்கும் சுமார் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி தினகரனும், மேற்கு வங்கத்தின் சபாங்கில் திரிணாமுல் காங்கிரஸ்யின் கீதா புனியா,அதே போன்று உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
தலைநகர் டெல்லியின் ஜனக்புரி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பார்வையற்ற மாணவர்களுக்காக இலவச இல்லம் ஒன்று இயங்கி வந்தது. அந்த இல்லத்தை, டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் சமீபத்தில் இடித்தனர். இதன் காரணமாக, அந்த இல்லத்தில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசம், பீகார், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25 பார்வையற்ற மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது அவர்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற பொதுவெளியில் தங்கியுள்ளனர். இதன் காரணமாக […]
அரசு மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் சார்பில் வட்டியில்லா வங்கி தொடங்க மோடி அரசு தடை விதித்துள்ள நிலையில்,கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கப்படும் சேவை.. இஸ்லாமிய அமைப்புகள் இந்தியாவில் வட்டியில்லா வங்கி துவங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துவிட்ட நிலையில்,கேரளாவில் CPI (M )கட்சி ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் அக்கட்சியின் ஏற்பாட்டில் கண்ணூரில் “ஹலால் ஃபாயிதா” என்ற பெயரில் வட்டியில்லா கூட்டுறவு வங்கி திறக்கப்படுகிறது.இந்த வங்கியை வரும் 24 ஆம் தேதி […]
காஷ்மீர் மாநிலத்தின் கேரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு இந்திய ரானுவத்துக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இன்னும் சண்டை நடந்து வருவதால் அந்த பகுதி பதற்றமாக இருக்கிறது. source : www.dinasuvadu.com
பீகார்; முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இவர் மீதான கால்நடைதீவன ஊழல் வழக்கில் இன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது, சிபிஐ நீதிமன்றம். இதனால் அவர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு இன்று வந்தார். அப்போது பேசிய லாலு பிரசாத் யாதவ் தனக்கு நீதியின் மீதும் நீதிமன்றங்கள் மீதும் இன்னும் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்… sources;www.dinasuvadu.com
குடித்துவிட்டு வண்டி ஒட்டினால் டிரன்க் அண்ட் டிரைவ் என வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும். அப்படி இருந்தும் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. இதனால் அரசு சட்டத்தை மேலும் வலுபடுத்தி உள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால், வண்டி ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்க பட்டுள்ளது. விபத்துகளினால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்த சட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளது. மேலும் வாகன […]
சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, அச்சடிக்கப்படும் எச்சரிக்கை படம் குறித்த ஆந்திரா நீதிமன்ற உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது. கடந்த, 2014ல், புகையிலை பொருள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் மீது, 85 சதவீதம், எச்சரிக்கை படம் இடம் பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், சிகரெட் பாக்கெட் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, 85 சதவீதத்திற்கு பதில், 40 சதவீத அளவு எச்சரிக்கை படம் இடம் பெறலாம் என, […]
கோத்ராவில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமானது எப்படி? – பிரியங்கா காந்தி கேள்வி கோத்ரா தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 1,78,911. ஆனால் மொத்தமாக பதிவான வாக்குகளோ 1,76,417. இங்கு பாஜக வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். பதிவான வாக்குகளைக் காட்டிலும் அதிக வாக்குகள் எண்ணப்பட்டது எப்படி? அதுவும் வித்தியாசம் 2,494 வாக்குகளா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்… source: www.dinasuvadu.com
இன்று தேசிய விவசாயிகளின் தினமாக கொண்டாடபாகிறது. இந்நிலையில் இன்று வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் சரண் சிங்கை நினைவில் வைத்து, ‘நாட்டிற்காக மிகவும் அர்பணிப்புடன் சேவை செய்த சவுத்திரி சரண் சிங், கிராமங்களின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் உரிமைக்காகவும் விடாமுயற்சியுடன், உழைத்தவர்’ என்று புகழாரம் சூடியுள்ளார். source : www.dinasuvadu.com
உத்தரப்பிரதேசம்; கள்ளச்சாரயம் குடிப்பதால் இறப்பவர்கள், கண், உடல் உறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும், லக்னோவில் 28 பேரும் இறந்தனர். மேலும், இட்டா, பருக்காபாத் போன்ற பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் […]